உட்லண்ட்ஸில் உள்ள தங்கும் விடுதியில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம்.
அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற சந்தேகத்தை பூர்த்திசெய்யும் வகையில், இந்தச் சோதனையில் பங்கேற்ற உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம் பக்கக் காவல் நிலையம், இது குறித்து ஃபேஸ்புக்கில் நேற்று (டிசம்பர் 10) பகிர்ந்துகொண்டது.
சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி
அதில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 12 வெளிநாட்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கூறியுள்ளது.
இதற்கு முன்னர், ஒரே ஒரு பங்களாதேஷ் ஊழியர் மட்டும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் கூறினர்.
கடந்த நவம்பர் 27 அன்று நடந்த நான்கு மணி நேர அதிரடி சோதனையில், 23 முதல் 40 வயதுக்குட்பட்ட மொத்தம் 12 வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர், மற்றவர்கள் அனைவரும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் உடைமைகளைச் சோதித்ததில், கண்ணாடி பாட்டில், உறிஞ்சு குழாய் மற்றும் ரப்பர் குழாய் போன்ற போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் பொருட்களையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும், நவம்பர் 28 அன்று நள்ளிரவு 1:20 மணியளவில் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

