[ad_1]
சிங்கப்பூர்: உட்லண்ட்ஸில் சட்டவிரோத பதுக்கல் வேலையில் ஈடுபட்ட இந்திய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
29 வயதுமிக்க அவர், வரி செலுத்தப்படாத 1,400க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகளுடன் பிடிபட்டார்.
உட்லண்ட்ஸ் டெரஸில் கடந்த மாதம் ஆகஸ்ட் 27 அன்று நடந்த சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (செப்டம்பர் 9) தெரிவித்தது.
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டின் பின்புறத்தில் நடந்த இந்த சோதனை நடவடிக்கையின் போது, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கனரக லாரிகளுக்கு இடையில் கருப்பு குப்பைப் பையை மாற்றுவதை சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.
பின்னர் அதனை சோதனை செய்த அதிகாரிகள், முதல் வண்டியில் வரி செலுத்தப்படாத 122 சிகரெட் அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை
மேலும் 2வது வண்டியில் சுமார் 1,323 அட்டைப் பெட்டிகள் மற்றும் 16 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தத்தில், ஏய்ப்பு செய்யப்பட்ட வரி மற்றும் சரக்கு மற்றும் சேவையின் (ஜிஎஸ்டி) மதிப்பு சுமார் S$156,693 ஆகும்.
விசாரணையில், வரி செலுத்தப்படாத சிகரெட்டு பெட்டிகளின் ஒரு பகுதியை இரண்டாவது லாரியில் இருந்து முதல் லாரிக்கு மாற்றுமாறு அந்த இந்திய நபருக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை
சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்