
இலங்கையில் கோதுமை மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராமுக்கு 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு உரிய உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய, சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியிலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

