கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்பானங்கள் பருகினாலும் ஒரு சிலர் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சூப் வகைகளையும் விரும்பி சாப்பிடுவர் . சூப் பிரியர்களுக்காகவே உடனடியாக சூப் தயாரிக்க கூடிய இயந்திரம் சந்தையில் அறிமுகமாகியுள்ளது .
30க்கும் மேற்பட்ட இயற்கை மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட சூப் வகைகளை நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் உடனடியாக தயார் செய்யக்கூடிய வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீராவி மூலம் இயங்கக்கூடிய இந்த இயந்திரம் குறைவான மின்சார செலவிலும் இங்க கூடியது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர் .
சென்னை பகுதியில் கிடைக்கக்கூடிய இந்த இயந்திரம் முப்பதாயிரம் முதல் சந்தையில் கிடைக்கிறது . இந்த இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 500 சூப்புகள் வரை தயாரிக்க முடியும் எனவும் , தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஏற்ற முடியும் என்கின்றனர்.
இது குறித்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இந்த இயந்திரத்தை வைத்திருக்கக்கூடிய விற்பனையாளர் கூறுகையில், 30க்கும் மேற்பட்ட பவுடர்கள் மூலம் வல்லாரை முருங்கை சிரியா நங்கை ஓரிதழ் தாமரை உள்ளிட்ட சூப்களை இந்த இயந்திரத்தில் தயாரிக்க முடியும் என கூறினார் . இதில் தயாரிக்கப்பட்ட சுவையாகவும் ருசியாக இருக்கும் எனவும் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
