Last Updated:
Cambodia thailand war | தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை வியாழக்கிழமை மோதலாக வெடித்தது.
உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு வருமாறு, தாய்லாந்தை கம்போடியா அழைத்துள்ளது.
தாய்லாந்து – கம்போடியா இடையேயான மோதல் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு வரும்படி கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. தாய்லாந்து, கம்போடியா இடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை வியாழக்கிழமை மோதலாக வெடித்தது. தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன.
இந்த தாக்குதலில் கம்போடியாவில் ஐந்து ராணுவ வீரர்கள், 7 பொதுமக்கள் என மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இரு நாட்டு மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என தாய்லாந்திற்கு கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தாய்லாந்திற்கு ஐ.நா சபை மூலம் கம்போடிய தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.
கம்போடியா – தாய்லாந்து நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டு எல்லையோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் அவசர உதவிக்கு 855 92881676 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
July 27, 2025 6:57 AM IST