Last Updated:
பி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு 64 வயதான, மூத்த நீதிபதி பி.ஆர்.கவாயை சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்தார். இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, பி.ஆர்.கவாய் நியமிக்கப்படுவதாக சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், எனவே, அவர் சுமார் 6 மாதங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.
April 30, 2025 8:22 AM IST


