Last Updated:
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் பணிகள் நடக்கின்றன. பாஜக தலைவர் நட்டா, துபேவின் கருத்துகளை நிராகரித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிஷிகாந்த் துபே, ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மத மோதலை தூண்டுவதாகவும், உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றும் என்றால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக நீதித்துறையை மதிப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பை பாதுகாக்கும் வலுவான தூணாக நீதிமன்றங்கள் உள்ளதாகக் கூறியுள்ள அவர், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோரின் கருத்துகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவினர் இனி இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது என்றும் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், நிஷிகாந்த் துபேவின் கருத்து பற்றி அட்டர்னி ஜெனரலுக்கு வழக்கறிஞர் அனஸ் ரன்வீர் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். நிஷிகாந்த் துபேவின் கருத்து நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 20, 2025 9:51 PM IST


