Last Updated:
Supreme Court Reservation | உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த விதிகளை திருத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விதிகளை திருத்தியுள்ளார்.
இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து ஊழியர்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது. அதில், ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை சார்ந்தோருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் விதமாக உச்சநீதிமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேவை மற்றும் நடத்தை விதிகள் 1961-இல் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற பதிவாளர், நீதிபதிகளின் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்துவது பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
July 06, 2025 10:32 AM IST
உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறை : விதிகளை திருத்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்