Last Updated:
திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னாய், அதுல் சந்துர்கர் ஆகிய 3 நீதிபதிகளை நியமித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 33 நீதிபதிகளுக்கான இடங்கள் உள்ள நிலையில் தற்போது தலைமை நீதிபதி உட்பட 30 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
பணி மூப்பு, தகுதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 30 பேர் கொண்ட பட்டியலில் இருந்து இவர்கள் 3 பேரை கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், இவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம்பால் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கு என்.வி.அஞ்சாரியா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். விஜய் பிஷ்னாய் கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஏ.எஸ். சந்துர்கர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளனர். இவர்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமனம்… உத்தரவிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு


