வங்கி பிக்சட் டெபாசிட்களுடன் ஒப்பிடும்போது: தற்போது, சிறந்த வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட்களில் கூட சுமார் 7.5% முதல் 7.75% வரை மட்டுமே வட்டி கிடைக்கிறது. அதிலும், மிக அரிதான சமயங்களில், பணம் திரும்பக் கிடைக்காத அபாயமும் உண்டு. ஆனால், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு முழுமையான அரசு உத்தரவாதம் உண்டு. அதாவது, உங்கள் அசலும் வட்டியும் 100% பாதுகாப்பானது. மேலும், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டிக்கு வரி உண்டு. ஆனால், PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்களுக்கு வரி விலக்கு உண்டு. எனவே, வரிக்குப் பிந்தைய வருமானத்தைக் கணக்கிட்டால், இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள் இன்னும் லாபகரமானவையாகவே இருக்கின்றன.


