அதிலும் குறிப்பாக, உங்களுடைய பர்சனல் ஐடென்டிபிகேஷன் நம்பர் அதாவது PIN நம்பர் திருடப்பட்டு விட்டால், அது மிகப்பெரிய பிரச்சனையில் முடிவடையலாம். PIN திருட்டு என்பது தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் உங்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால் ஒரு சில புத்திசாலித்தனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக உங்களுடைய PIN நம்பர் திருடப்படுவதை உங்களால் தடுக்க முடியும். அவ்வாறான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்டர் செய்யும்போது உங்களுடைய PIN நம்பரை மறைத்துக் கொள்ளவும்:
எப்பொழுதுமே ATM அல்லது செக்-அவுட் கவுன்ட்டரில் PIN நம்பரை என்டர் செய்யும்போது, உங்களுடைய கைகளை பயன்படுத்தி கீபேடை மறைத்துக் கொண்டு PIN நம்பரை என்டர் செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும்போது அருகில் இருக்கும் நபருக்கோ அல்லது அங்கு மறைமுகமாக வைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலமாகவோ நீங்கள் என்டர் செய்யும் PIN நம்பர் தெரியாது.
PIN நம்பரை பிறருக்கு பகிரவோ அல்லது எழுதி வைக்கவோ கூடாது:
எந்த ஒரு நம்பகமான வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுடைய PIN நம்பரை கேட்டு உங்களுக்கு போன் கால் அல்லது இமெயில் அனுப்பாது. எனவே, உங்களுடைய நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தால் கூட ATM கார்டின் PIN நம்பரை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு PIN நம்பரை நோட்புக், டைரி அல்லது போன்களில் எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இவ்வாறு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் ATMகளை மட்டுமே பயன்படுத்தவும்:
கேஷ் வித்ட்ராவல் செய்யும் போது வங்கி கிளைகள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ள ATMகளை தேர்வு செய்யுங்கள். தனித்து இருக்கக்கூடிய அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத ATMகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கார்டை நுழைப்பதற்கு முன்பு கார்டை நுழைக்கும் ஸ்லாட் மற்றும் கீபேட்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்க்கவும்.
உங்களுடைய அக்கவுன்ட்டை அடிக்கடி கண்காணிப்பது:
பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் மூலமாக உங்களுடைய அக்கவுன்ட்டின் பண பரிமாற்றங்களை வழக்கமான முறையில் சோதிப்பது ஒரு நல்ல பழக்கமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக ஏதேனும் அதிகாரப்பூர்வமற்ற பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் உடனடியாக அடையாளம் காணலாம். சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்கள் அல்லது வித்ட்ராயல்கள் நடைபெற்று இருந்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். மேலும், உங்களுடைய கார்டு மீண்டும் தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு கார்டை பிளாக் செய்யவும்.
ஆன்லைன் மற்றும் இன்டர்நெட் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்:
இந்த மாதிரியான PIN நம்பர் திருட்டு என்பது ஆன்லைனில் கூட நடைபெறலாம். மோசடிக்காரர்கள் உங்களுக்கு இமெயில், SMS அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி வங்கியில் வேலை செய்பவர்கள் போல நடித்து, உங்களுடைய விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, ஒருபோதும் சந்தேகத்திற்கு இடம் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும், உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களை யாருக்கும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
போன் மற்றும் அப்ளிகேஷன்களை பாதுகாக்கவும்:
பெரும்பாலான நபர்கள் மொபைல் போன்கள் மூலமாகவே பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே, உங்களுடைய போனை பாஸ்வோர்ட், கைரேகை அல்லது ஃபேசியல் ஸ்கேன் போன்றவை மூலமாக லாக் செய்து பாதுகாப்பாக வைக்கவும். உங்களுடைய டெபிட் கார்டு தகவல்களை எந்த ஒரு அப்ளிகேஷனிலும் சேமித்து வைக்க வேண்டாம். ஒருவேளை உங்களுடைய போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ உடனடியாக வங்கிக்கு அதனை தெரிவித்து, மொபைல் பேங்கிங் சேவையை டீ-ஆக்டிவேட் செய்து விடுங்கள்.
உங்களுடைய PIN நம்பரை யாராவது திருடிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை உங்களுடைய PIN நம்பரை யாராவது திருடிவிட்டால், உடனடியாக வங்கியின் ATM அல்லது ஆன்லைன் மூலமாக PIN நம்பரை மாற்றி விடுங்கள். மேலும், இது குறித்து வங்கியிடம் தெரிவித்து, தேவைப்பட்டால் உங்களுடைய அக்கவுன்ட்டை தற்காலிகமாக டீ-ஆக்டிவேட் செய்யவும். மேலும், இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு நீங்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். PIN, டெபிட் கார்டு திருட்டை தடுப்பதற்கான பெரும் பங்கு உங்களுடைய கையில் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
May 18, 2025 11:23 AM IST
உங்க டெபிட் கார்டு நம்பரை யாரும் திருட முடியாமல் பாதுகாக்கணுமா…? இதையெல்லாம் செஞ்சிடுங்க…

