Last Updated:
கிரெடிட் கார்டுகள் தங்களுக்கென தனித்த இடத்தை மக்களிடம் பெற்றுள்ளன. இருப்பினும், அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு மோசடிக்கான அபாயத்தையும் அதிகரித்துள்ளது. ஆகவே கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எச்சரிக்கையாகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்தி வரும் நிலையில், யூசர்களுக்கு வசதி, வெகுமதிகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை என கிரெடிட் கார்டுகள் தங்களுக்கென தனித்த இடத்தை மக்களிடம் பெற்றுள்ளன. இருப்பினும், அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு மோசடிக்கான அபாயத்தையும் அதிகரித்துள்ளது. ஆகவே கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எச்சரிக்கையாகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கேஷ்பேக் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விமான நிலைய லவுஞ்ச் அணுகல் என வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. ஆனால் இந்த சலுகைகள் சைபர் குற்றவாளிகள் மற்றும் மோசடி செய்பவர்களின் வலையில் யூசர்களை சிக்க வைக்கக்கூடும். நிதியை நிர்வகிப்பது போலவே கிரெடிட் கார்டு விவரங்களையும் பாதுகாப்பது முக்கியமானது என நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். உங்கள் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்க 5 வழிகளை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் கிரெடிட் கார்டு எண், அதன் CVV அல்லது PIN எண்ணை யாருடனும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முக்கியமாக எந்த வங்கியும் தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் இந்த விவரங்களைக் கேட்பதில்லை. எனவே இதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகளைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை உடனடியாகப் புகாரளிப்பது சாத்தியமான இழப்புகளைத் தடுக்கலாம்.
இணையதள முகவரி “https” என்றுள்ள வலைத்தளங்களில் மட்டுமே பணம் செலுத்துங்கள். அதேபோல் பரிவர்த்தனைகளுக்கு ஒருபோதும் பொது Wi-Fi ஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் உண்மையான கிரெடிட் கார்டு விவரங்களை மறைக்கும் மெய்நிகர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள்.
பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அதுகுறித்த தகவல்களை வழங்குகின்றன. இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம், அங்கீகரிக்கப்படாத செயல்பாடு குறித்த செய்தியை உறுதிசெய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறது.
நவீன கிரெடிட் கார்டுகள் இரண்டு அடுக்கு அங்கீகாரம், செலவு வரம்புகள் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு ஆப்ஷன்களுடன் வருகின்றன. பாரம்பரிய ஸ்ட்ரைப் கார்டுகளை விட மிகவும் பாதுகாப்பான EMV சிப் கார்டுகளை வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கிரெடிட் கார்டை எப்போதும் உங்கள் வசம் வைத்திருங்கள். வேறு யாரும் அதைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். ஏடிஎம்-கள் அல்லது விற்பனை முனையங்களில் ஸ்கிம்மிங் சாதனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பழைய அறிக்கைகள் மற்றும் ரசீதுகளை துண்டு துண்டாக கிழித்து அல்லது எரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.
இன்று பல இடங்களில் யூபிஐ மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் இரண்டையும் ஏற்றுக்கொள்வதால், இந்த நடைமுறை நடவடிக்கைகளை பின்பற்றுவது மோசடி அபாயத்தை கணிசமாகக் குறைத்து, அதிகரித்து வரும் டிஜிட்டல் நிதி சூழலில் யூசர்களுக்கு மன அமைதியை அளிக்கும்.
October 25, 2025 8:01 PM IST


