Last Updated:
ஆதார் சம்பந்தப்பட்ட சேவைகளைப் பெறுவதற்கும், டிஜிட்டல் ஆதார் அட்டையை எங்கு சென்றாலும் மொபைலில் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லேட்டஸ்ட் ஆதார் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது உங்களுடைய 12 இலக்க ஐடி கார்டை எங்கு சென்றாலும் மொபைலில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் லேட்டஸ்ட் ஆதார் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு கிடைக்கிறது.
இந்த லேட்டஸ்ட் ஆதார் அப்ளிகேஷன் முகத்தை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பம், கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் அடங்கிய லாக் அமைப்பு மற்றும் QR கோடு அடிப்படையிலான ஷேரிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் ஆதார் அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய குடும்பத்தாருடைய 5 ஆதார் சுய விவரங்கள் வரை உங்களால் நிர்வகிக்க முடியும். ஆனால், இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அந்த அனைத்து ஆதார் அட்டைகளும் ஒரே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரைக் கொண்டிருக்க வேண்டும்.
“உங்களுடைய டிஜிட்டல் அடையாளத்தை சுமந்து செல்வதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழியை அனுபவிக்க தயாராகுங்கள். இந்த புதிய ஆதார் அப்ளிகேஷன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, எளிமையான பயன்பாடு மற்றும் முற்றிலும் ஆவணம் இல்லாத அனுபவத்தை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் உங்களுக்கு வழங்கும்” என்று UIDAI ஒரு டிவீட் மூலமாகப் பதிவு செய்துள்ளது. UIDAI வெளியிட்ட டிவீட்டை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணுங்கள்.
ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது, வெர்ச்சுவல் ஐடி-களை உருவாக்குவது, தங்களுடைய விவரங்களை அப்டேட் செய்வது போன்ற ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து தேவைகளையும் இந்த லேட்டஸ்ட் ஆதார் அப்ளிகேஷன் மூலமாக யூசர்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். உங்க ஆதார் மட்டுமில்ல… உங்க குடும்பத்தாரோட ஆதார் அட்டையைக் கூட இந்த அப்ளிகேஷன்ல மேனேஜ் பண்ணிக்கலாம்.
மேலும், இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய யூசர்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். இந்த ஆதார் அப்ளிகேஷனில் டிஜிட்டல் அடையாள அட்டை இருப்பதன் காரணமாக இனி உங்களுடைய ஆதார் கார்டை கையில் சுமந்துசெல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
November 13, 2025 7:38 PM IST
உங்க ஆதார் மட்டுமல்ல… குடும்பத்தோட ஆதாரையும் இந்த அப்ளிகேஷன்ல மேனேஜ் பண்ணிக்கலாம்… UIDAI வெளியிட்ட லேட்டஸ்ட் ஆப்…!


