08

10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால், காலக்கெடுவிற்குப் பிறகு அவை செல்லாததாகி, ரத்து செய்யப்படும் என்று ஒரு போலி செய்தி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. இதனால் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால், இதற்கு யுஐடிஏஐ பதிலளித்துள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாத ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் வைரலாகி வருவதால் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
&w=750&resize=750,375&ssl=1)
