சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காக வந்த இந்திய ஊழியர், தனது தங்கையைத் தாக்கி கொள்ளையடித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
47 வயதுமிக்க கிருஷ்ணகுமார் துரைராஜ் என்ற அந்த ஆடவர், தனது இளைய தங்கையின் சுமார் S$40,000 மதிப்புள்ள தங்க நகைகளையும் கொள்ளையடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
கிருஷ்ணகுமார், அக்டோபர் 29 அன்று திருட்டு குற்றச்சாட்டையும் கொள்ளை குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல் வந்துள்ளது.
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை
கிருஷ்ணகுமாரின் சகோதரி சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் அவரின் வீட்டில் தங்கி வேலை தேடும் நோக்கில் 2023 மே 6 அன்று கிருஷ்ணகுமார் இங்கு வந்தார்.
செலவுகளுக்காக வேண்டி கிருஷ்ணகுமாரிடம் S$2,500 வெள்ளியை சகோதரி கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்டு சுமார் இரண்டு மாதங்கள் ஆன பிறகும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை, இதனால் கிருஷ்ணகுமாருக்கும் அவரின் சகோதரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேலை தேடுவதை தொடர வேண்டும் என்றால் தாம் சிங்கப்பூரில் தங்க வேண்டும் என கிருஷ்ணகுமார் வலியுறுத்தியுள்ளார், ஆனால் அதனை விரும்பாத சகோதரி அவரை இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் 2023 ஜூலை 27 அன்று, காலை நேரத்தில் கிருஷ்ணகுமார் மது போதையில் வீடு திரும்பினார், அப்போது அவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையே மீண்டும் சச்சரவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சச்சரவு முற்றிப் போய், கிருஷ்ணகுமார் பானையை வைத்து சகோதரி தலையில் நான்கு முறை தாக்கினார், அதோடு கேபிள் கட்டும் பிளாஸ்டிக் கயிறு மற்றும் நைலான் கயிற்றைப் பயன்படுத்தி சகோதரியின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டுள்ளார்.
காவல்துறையினரை அழைக்கப்போவதாக கூறி சகோதரி அழுது சத்தம் போட தொடங்கியதும், வாயை டேப் போட்டு அடைந்துள்ளார் கிருஷ்ணகுமார்.
சத்தம் போட்டால் மேலும் சித்ரவதை செய்வேன் என கத்தியை கொண்டும் அவர் மிரட்டியுள்ளார்.
மேலும், சகோதரியின் கைபேசி கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கின் PIN எண்ணையும் கேட்டு அவர் மிரட்டியதும், பயத்தின் காரணமாக அதன் விவரங்களை அவர் கிருஷ்ணகுமாரிடம் கூறினார்.
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்
பின்னர் தனது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் S$38,999 பணத்தை கிருஷ்ணகுமார் மாற்றிக்கொண்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி; கிருஷ்ணகுமார் தனது சகோதரியின் நகைகள் பலவற்றை திருடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் தனது சகோதரியை தமிழில் மிரட்டியுள்ளார்; “நான் உன்னையும் உன் பிள்ளைகளையும் கொன்னு உங்கள பிளாஸ்டிக் பையில போட்டு அடச்சி யாருக்கும் தெரியாத இடத்தில் போட்டுவிட்டு இந்தியாவுக்கு போயிருவேன்” என்று கூறினார்.
இறுதியில், அந்தப் பெண் சுயமாகவே கட்டவிழ்த்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஹாயாக, குளியலறையிலிருந்து வெளியே வந்த கிருஷ்ணகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன, ஆனால் வங்கி கணக்கிலிருந்து மாற்றப்பட்ட பணத்தை மட்டும் மீட்டெடுக்க முடியவில்லை.
பின்னர் அவரின் சகோதரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், அவரது நெற்றியில் பெரிய வீக்கம், அவரது தலையில் 2 செ.மீ. அளவுக்கு வெட்டுக்காயம் மற்றும் மூளையை ஸ்கேன் செய்ததில் hematomas என்னும் காயங்கள் இருப்பது தெரியவந்தது, இது மிக கடுமையான காயங்கள் வகையாகும்.
அந்த பெண் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், தனது சூட்கேஸை சோதித்ததில் 22 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதையும் அவர் கண்டுபிடித்தார்.
2023 ஜூன் 1 மற்றும் ஜூலை 24 வரை, கிருஷ்ணகுமார் தனது சகோதரியின் தங்க நகைகளைத் திருடி, ஐந்து முறை அடகு வைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
அந்த நகைகளின் மொத்த மதிப்பு S$16,090 ஆகும்.
சிங்கப்பூரில் புளாக்கில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாப மரணம் – மன அழுத்தம் காரணமா?

