பல இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்கினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவசர நிதியின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள். திடீரென வேலை பறிபோவது, மருத்துவச் செலவுகள் அல்லது எதிர்பாராத அவசரச் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாத அளவிலான சம்பளப் பணத்தை அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க, அவசர நிதியாகச் சேர்த்து வைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக உங்கள் ஊதியம் ரூ.50,000 என்று வைத்துக்கொண்டால் அவசர நிதியாகப் பயன்படுத்த ரூ.1.50 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் உங்களிடம் சேமிப்பு எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.


