இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியமாகும். வங்கி கணக்கு தொடங்குவது முதல் வாக்கு செலுத்துவது வரை ஆதார் அட்டை முதன்மை அடையாளமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி குறித்த முக்கிய தரவுகள் இடம்பெற்றிருக்கும்.
அதுமட்டுமன்றி ஆதார் அட்டைகளில் 12 இலக்க எண்களும் இருக்கும். அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த ஆதார் அட்டை பெரியவர்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறிய குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பால்ய ஆதார் கார்டு அல்லது ப்ளூ ஆதார் கார்டு என அழைக்கப்படுகிறது.
ஆதார் அட்டை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இது பல்வேறு துறைகளிலும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான ப்ளூ ஆதார் பிறந்த குழந்தைகள் முதல் 5 குழந்தைகள் வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை பெற பெரிதாக ஆவணம் எதுவும் தேவைப்படாது. பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட் போதுமானது.
ப்ளூ ஆதார் அட்டையை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? :
1. முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. பின்னடர் My Aadhaar – க்குள் சென்று “Book an appointment” என்பதை கிளிக் செய்யவும்.
3. Child Aadhar என்பதை தேர்வு செய்யவும். New Aadhaar என்பதைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும். பின்னர் Relationship with head of the family என்பதன் கீழ் Child 0-5 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் குழந்தையின் விவரங்களை கவனமாக பதிவிடவும். மேலும் உங்களிடம் போதுமான அவனங்களை இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
5. உங்கள் ஆபாயிண்ட்மென்ட் ஐ பதிவு செய்யுங்கள். அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும். உங்கள் முன்பதிவை உறுதிப்படுதிக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
