• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்கள் நிறுவனம் PF பணத்தை சரியாக செலுத்துகிறதா? கண்டுபிடிப்பது எப்படி? இல்லை என்றால் எப்படி புகார் அளிப்பது? | PF Deducted From employee Salary But Not Deposited? Here’s How to Check

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்கள் நிறுவனம் PF பணத்தை சரியாக செலுத்துகிறதா? கண்டுபிடிப்பது எப்படி? இல்லை என்றால் எப்படி புகார் அளிப்பது? | PF Deducted From employee Salary But Not Deposited? Here’s How to Check
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உங்கள் நிறுவனம் PF பணத்தை சரியாக செலுத்துகிறதா? கண்டுபிடிப்பது எப்படி? இல்லை என்றால் எப்படி புகார் அளிப்பது?

சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் PF தொகை தான் முதன்மையான சேமிப்பாக இருக்கிறது. நீண்ட காலமாகவே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு தங்களுடைய சம்பளம் அதிகரிக்கவில்லை.. ஆனால் விலைவாசி அதிகரிக்கிறதே என்ற கவலை இருந்து வருகிறது. இருந்தாலும் நிறுவனங்களே பணத்தை பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை சம்பளமாக போடுவதால் அவர்களுக்கே தெரியாமல் குறிப்பிட்ட தொகை சேமிப்பாகிறது.

ஊழியர்களின் அக்கவுண்டுக்கு வருவதற்கு முன்னரே சம்பள தொகையிலிருந்து PF பணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும். ஆனால் இந்தத் தொகை உண்மையிலேயே உங்களுடைய PF அக்கவுண்டுக்கு செல்கிறதா? என்பதை நீங்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

உங்கள் நிறுவனம் PF பணத்தை சரியாக செலுத்துகிறதா? கண்டுபிடிப்பது எப்படி? இல்லை என்றால் எப்படி புகார் அளிப்பது?

பிஎஃப் தொகையை பொருத்தவரையில் ஒரு ஊழியர் பணி புரியும் நிறுவனம் மற்றும் அவருடைய சார்பிலும் பங்களிப்பு செய்யப்பட வேண்டும். இந்த தொகை ஒரு மாதம் முடிந்த 15 நாட்களுக்குள் ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் ஈபிஎப்ஓ போர்டல் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

EPFO இணையதளத்தில் ஈபிஎஃப் பாஸ்புக் இருக்கும். உங்கள் பங்களிப்பு என்ன?, உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு என்ன? என அனைத்து விவரங்களையும் வெறும் UAN நம்பரை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதில் உங்கள் PF பங்களிப்பு குறித்து மாத வாரியான டேட்டா இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு மாதத்தில் உங்கள் PF தொகை செலுத்தப்படவில்லை என்றாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக ஜூலை மாத சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்றால் அந்த மாதத்திற்கான பங்களிப்பு உங்கள் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கலாம்.

EPF பாஸ் புக்கை சரி பார்ப்பது எப்படி?:

ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய யுஏஎன் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையுங்கள்.

ஸ்டெப் 2: பின்னர் மெம்பர் பாஸ்புக் சர்வீசஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களுடைய மெம்பர் ஐடியை வழங்கி PF பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

EPFO அமைப்பு “பாஸ்புக் லைட்” என்ற வசதியையும் வழங்குகிறது. இதற்கு நீங்கள் உமாங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் யார் வேண்டுமானாலும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யலாம்.

உங்கள் நிறுவனம் PF தொகையை செலுத்தவில்லை என்றால் என்ன செய்வது?: PF பணம் பிடித்தம் செய்யப்பட்டவுடன் உங்கள் அக்கவுண்டுக்கு வராது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கென குறிப்பிட்ட காலம் இருக்கிறது. அதாவது பணம் பிடித்தம் செய்யப்பட்டதிலிருந்து 15 நாட்கள். அதன் பிறகு உங்கள் அக்கவுண்டுக்கு பணம் சென்றடையும். அப்போதும் பணம் ஏறவில்லை என்றால் முதலில் HR-ஐ அணுகி பேச வேண்டும்.

இதில் தீர்வு கிடைத்தால் சரி.. அப்படி இல்லை என்றால் பாதிக்கப்படும் உறுப்பினர்கள் கிரிவன்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இல்லயென்றால் PF அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி சமர்ப்பிக்கலாம். அதற்கு நீங்கள் எழுதும் கடிதத்துடன் பே ஸ்லிப் மற்றும் EPF அறிக்கை போன்ற எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Share This Article

Story first published: Wednesday, September 16, 2026, 15:49 [IST]

Other articles published on Sep 16, 2026

Read More

Previous Post

“காவல்துறை உதவியுடன் பாஜகவினர் என் மீது முட்டை வீசி தாக்கினர்” – மஹுவா மொய்த்ரா எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Tamilmirror Online || மட்டக்குளியில் கோர விபத்து : பலர் மரணம்

Next Post
Tamilmirror Online || மட்டக்குளியில் கோர விபத்து : பலர் மரணம்

Tamilmirror Online || மட்டக்குளியில் கோர விபத்து : பலர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin