Last Updated:
டிஜிட்டல் பேமென்ட்கள் சௌகரியமான ஒன்றாக இருந்தாலும், தங்களுடைய மொத்த பணப்பரிவர்த்தனை குறித்த வரலாற்றை அனைவரும் பார்க்கும்படி வைத்திருப்பதை எல்லோரும் விரும்புவது கிடையாது.
இன்று டிஜிட்டல் பேமென்ட்கள் என்பது மிகவும் பிரபலமான ஒரு பேமென்ட் முறையாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் டிஜிட்டல் பேமென்ட்கள் தொடர்பான அம்சங்களை, டிஜிட்டல் பேமென்ட் அப்ளிகேஷன்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் Paytm சமீபத்தில் டிஜிட்டல் பேமென்ட் டிரான்சாக்ஷனை மறைத்து வைப்பதற்கான ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த அம்சம் பற்றிய கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
டிஜிட்டல் பேமென்ட்கள் சௌகரியமான ஒன்றாக இருந்தாலும், தங்களுடைய மொத்த பணப்பரிவர்த்தனை குறித்த வரலாற்றை அனைவரும் பார்க்கும்படி வைத்திருப்பதை எல்லோரும் விரும்புவது கிடையாது. உங்களுடைய போனை நீங்கள் வேறு ஒருவருக்கு ஷேர் செய்தாலோ அல்லது பேமென்ட் ஸ்கிரீனை தெளிவாக வைத்திருக்க விரும்பினாலோ Paytm வழங்கும் ஹைடு பேமென்ட் (Hide Payment) அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை வரலாற்றை டெலீட் செய்யாமலேயே, குறிப்பிட்ட சில டிரான்ஸாக்ஷன்களை உங்களால் மறைத்து வைக்க முடியும்.
“ஹைடு பேமென்ட்” அம்சம் என்பது மிகவும் எளிமையான முறையில் இயங்குகிறது. மொத்த அப்ளிகேஷனையும் மறைப்பதற்கு பதிலாக அல்லது ஒவ்வொரு பிரிவையும் லாக் செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பேமென்ட் சம்பந்தப்பட்ட விவரங்களை மட்டும் உங்களால் மறைக்க முடியும். இந்த மறைத்து வைக்கப்பட்ட டிரான்ஸாக்ஷன் அடங்கிய பட்டியலானது அந்த அப்ளிகேஷனுக்குள் PIN அல்லது பயோமெட்ரிக் மூலமாக பாதுகாக்கப்படும். அதனை எந்த நேரத்திலும் உங்களால் அணுக முடியும். இதில் எந்த ஒரு டிரான்சாக்ஷன் வரலாறும் நிரந்தரமாக டெலீட் செய்யப்படாது.
பேமென்ட்டை எப்படி மறைப்பது?
- முதலில் Paytm அப்ளிகேஷனை திறந்து கொள்ளுங்கள்.
- ’பேலன்ஸ் & ஹிஸ்டரி’ (Balance & History) ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.
- நீங்கள் மறைக்க நினைக்கும் பேமென்டை தேர்வு செய்யவும்.
- குறிப்பிட்ட அந்த டிரான்சாக்ஷனை இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
- பிறகு ஹைடு (Hide) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- Yes, Hide Payment என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்தவும்.
- இப்போது நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட டிரான்சாக்ஷன் பட்டியலில் இருந்து மறைந்துவிடும்.
மறைத்துவைத்த பேமென்டை மீண்டும் எப்படி அன்ஹைடு செய்வது?
- Paytm அப்ளிகேஷனை திறந்து மீண்டும் ‘பேலன்ஸ் & ஹிஸ்டரி’ ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.
- மேற்புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவை கிளிக் செய்யுங்கள்.
- வியூ ஹிட்டன் பேமென்ட் (View Hidden Payment) என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய போன் PIN அல்லது கைரேகை, ஃபேஸ் ID போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி அன்லாக் செய்யவும்.
- குறிப்பிட்ட அந்த டிரான்ஸாக்ஷனை இடதுபுறமாக ஸ்வைப் செய்யுங்கள்.
- ’அன்ஹைடு’ (Unhide) என்பதை தட்டுங்கள்.
இப்போது நீங்கள் ஸ்வைப் செய்த அந்த டிரான்சாக்ஷன் வழக்கமான பட்டியலில் முன்பு போல டிஸ்ப்ளே செய்யப்படும்.
November 19, 2025 6:10 PM IST
உங்களோட டிஜிட்டல் பேமென்ட் டிரான்சாக்ஷனை மறைத்து வைக்கணுமா…? Paytm அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்…!


