Last Updated:
உங்களுடைய PAN கார்டை பயன்படுத்தி யாராவது லோன் எடுத்து இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. கூடுதலாக உங்களுடைய PAN கார்டை பாதுகாப்பாக வைத்து, தனிநபர் விபரங்களை அதிகாரப்பூர்வ நபர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வது அவசியம்.
உங்களுடைய PAN கார்டு என்பது ஒரு ஆவணம் என்பதையும் தாண்டி, அது உங்களுடைய பொருளாதார அடையாளத்திற்கான ஒரு முக்கியமான அட்டையாக செயல்படுகிறது. ஒருவேளை உங்களுடைய PAN கார்டு தவறான நபர்களிடத்தில் மாட்டிக் கொண்டால், அவர்கள் உங்களுடைய பெயரில் கடன்களை விண்ணப்பிப்பது போன்ற விஷயங்களை உங்களுக்கு தெரியாமலேயே செய்யலாம். இப்படி உங்களுடைய PAN கார்டு தவறாக பயன்படுத்துவது உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். மேலும், சட்டரீதியான சிக்கல்களை கொண்டுவருவதோடு, அந்தக் கடன்களையும் நீங்கள் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
உங்களுடைய PAN கார்டை பயன்படுத்தி யாராவது லோன் எடுத்து இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. கூடுதலாக உங்களுடைய PAN கார்டை பாதுகாப்பாக வைத்து, தனிநபர் விபரங்களை அதிகாரப்பூர்வ நபர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வது அவசியம். வழக்கமான முறையில் உங்களுடைய ஃபைனான்சியல் ஸ்டேட்மெண்டுகள் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட் போன்றவற்றை சரிபார்ப்பது உங்களுடைய PAN கார்டு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு உதவும்.
உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை கவனிக்கவும்:
உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை பார்த்தாலே உங்களுடைய PAN கார்டின் கீழ் ஏதாவது லோன்கள் எடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். CIBIL போன்ற கிரெடிட் பியூரோக்கள் உங்களுடைய பெயரில் உள்ள அனைத்து லோன்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்த வெப்சைட்டுகளை பயன்படுத்தி உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை இலவசமாக பெறுவதன் மூலமாக உங்களுடைய பெயரில் வாங்கப்பட்டுள்ள லோன்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஃபின்டெக் அப்ளிகேஷன்கள்:
நிலுவையில் உள்ள பேமெண்ட்களை தெரிந்து கொள்வதற்கு ஃபின்டெக் அப்ளிகேஷன்களை பயன்படுத்துங்கள். இதனை செய்வதற்கு முதலில் நீங்கள் ஒரு ஃபின்டெக் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு சம்பந்தமான பிரிவுக்கு சென்று நிலுவையில் உள்ள உங்களுடைய கடன்களை பார்க்கலாம்.
கடன்கள் எடுப்பதற்கு உங்களுடைய PAN கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பதை அறிவுறுத்தும் எச்சரிக்கை அறிகுறிகள்:
உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்டில் அதிகாரப்பூர்வமற்ற டிரான்ஸாக்ஷன்கள் அல்லது கடன்கள் இருந்தால் உங்களுடைய PAN நம்பரை பயன்படுத்தி மோசடி செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலும், நீங்கள் எதுவும் செய்யாமலேயே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் திடீரென்று குறைந்துபோகும் பட்சத்தில் அது உங்களுடைய PAN கார்டின் கீழ் எடுத்து இருக்கக்கூடிய லோன்களின் அடையாளமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் எடுக்காத லோன்கள் சம்பந்தமாக போன் கால்கள் அல்லது கடிதங்கள் வந்தாலும் இது நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
- உங்களுடைய பெயரின் கீழ் போலியான லோன் எடுக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தால் உடனடியாக லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் அல்லது சைபர் கிரைம் செல்லுக்கு சென்று ஒரு FIR-ஐ தாக்கல் செய்யுங்கள்.
- வங்கி அல்லது கடன் வழங்குநரை தொடர்பு கொண்டு அவர்கள் போலி லோனை வழங்கி இருப்பதாக தெரிவியுங்கள்.
- லோனை நீங்கள் வாங்கவில்லை என்பதை தெரிவித்து கிரெடிட் பியூரோக்களுக்கு புகார்களை தாக்கல் செய்யுங்கள்.
- இது குறித்து விசாரணையை நடத்துமாறு கோரிக்கை வைத்து, உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் இருந்து அதனை அகற்றுமாறு கேளுங்கள்.
- உங்களுடைய PAN கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக மீண்டும் அதனை பிரிண்ட் செய்து அடுத்த ஒரு சில மாதங்களுக்கு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை தொடர்ந்து கண்காணியுங்கள்.
- உங்களுடைய PAN கார்டுடன் தொடர்புடைய ஏதேனும் கடன் அல்லது கிரெடிட் அப்ளிகேஷன்கள் சம்பந்தமான SMS அல்லது இமெயில் நோட்டிஃபிகேஷன்களை எனேபில் செய்து வையுங்கள்.
- தெரியாத மூலங்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
- பாதுகாப்பற்ற வெப்சைட்டுகள் மற்றும் அப்ளிகேஷன்களில் உங்களுடைய PAN கார்டை பகிர வேண்டாம்.
- தேவையில்லாமல் உங்களுடைய PAN கார்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
July 28, 2025 7:12 PM IST
உங்களுடைய பான் கார்டில் யாராவது லோன் வாங்கி இருக்காங்களான்னு எப்படி கண்டுபிடிக்கறது…? வழிமுறைகள் இதோ…