• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா…? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது…?

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா…? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏனென்றால், முதல் கிரெடிட் கார்டு பயன்படுத்த துவங்கிய சில மாதங்களிலேயே அல்லது விரைவிலேயே அடுத்த கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பொதுவாக நீங்கள் ஒரு புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, அதனை வழங்கும் நிறுவனம் உங்கள் லோன் ஹிஸ்ட்ரியை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தும். அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக குறைக்கக்கூடும்.

அதேபோல், நீங்கள் தொடர்ச்சியாக கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதுஉங்களின் பணப்புழக்கத்தில் சிக்கல் இருப்பதாக வங்கிகள் கருதலாம். இதன் காரணமாக உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

இரண்டாவது கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க எவ்வளவு நேரம் காத்திருக்கலாம்.?

நீங்கள் முதல் கிரெடிட் கார்டை பெற்ற பிறகு இரண்டாவது கிரெடிட் கார்டைப் பெறுவதற்கு முன் குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்க பொதுவாக கடன் வழங்கும் நிறுவனங்களும், நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். இந்த இடைவெளியானது உங்கள் முதல் கார்டில் பேமென்ட் ஹிஸ்ட்ரியை பதிவு செய்யவும், உங்கள் பயன்பாட்டு விகிதத்தை மேம்படுத்தவும், கடனை திரும்ப செலுத்துவதில் உங்களின் பொறுப்பை நிரூபிக்கவும் உதவுகிறது.

நீங்கள் சரியான நேரத்தில் உங்களின் கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்தி, குறைந்த பேலன்ஸை பராமரித்து, உங்கள் கிரெடிட் கார்டில் தேவையான குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்துவதில் சரியாக செயல்பட்டால் கடன் வழங்குவோர் உங்களை கடனை திருப்பி செலுத்துவதில் பொறுப்பாக இருப்பவர் என்று கருதி நீங்கள் விண்ணப்பிக்கும் அடுத்த கிரெடிட் கார்டில் சிறந்த ரிவார்ட்ஸ் அல்லது அதிக கிரெடிட் லிமிட் போன்ற அதிக நன்மை பயக்கும் அம்சங்களை உங்களுக்கு வழங்கக்கூடும்.

எனினும், மேற்சொன்ன மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான வெயிட்டிங் பீரியட் என்பது ஒருசில தனிப்பட்ட பண காரணிகளைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடலாம். உதாரணமாக, உங்கள் முதல் கிரெட்டிட் விண்ணப்பித்ததில் இருந்து நீங்கள் சமீபத்தில் சிறந்த கிரெடிட்டைப் பெற்றிருந்தால், கடன் வழங்குவோர் உங்களின் இரண்டாவது கார்டு கோரிக்கையை விரைவாக அங்கீகரிக்க பரிசீலிக்கலாம்.

ஆனால், மறுபுறம் கடனை நிர்வகிக்க, கடன்களை திருப்பிச் செலுத்தவும் வாடிக்கையாளரின் திறனை மதிப்பிட கடன் வழங்குபவர்கள் பயன்படுத்தும் கடன்-வருமான (debt-to-income) விகிதம் அதிகமாக இருந்தால், இந்த கணிசமான காத்திருப்பு நேரம் கூட உதவாது. நீங்கள் இரண்டாவது கார்டு கோருவதற்கான காரணத்தை கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகள் சேஸின் 5/24 விதி போன்ற பிற விதிகளைக் கொண்டுள்ளன, இது சமீபத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட புதிய அட்டைகளைப் பெறுபவர்களுக்கு கடன் விண்ணப்பங்களை மறுக்கிறது.

வாய்ப்புகளை எவ்வாறு அதிகரிப்பது?

இரண்டாவது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோரை மதிப்பாய்வு செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. அதேபோல், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (credit utilization ratio ) 30%க்கும் குறைவாக பராமரிக்க முயற்சி செய்து, உங்கள் தற்போதைய கார்டில் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை தொடருங்கள்.

அதேபோல், இந்த காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு அல்லது புதிய கடன்கள் போன்ற பிற வகையான கடன்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கூடுதல் விசாரணைகள் உங்கள் ஸ்கோரைத் தொடர்ந்து பாதிக்கும். ஒரு கிரெடிட் கார்டு விண்ணப்பித்த பிறகு அல்லது கையில் கிடைத்த பிறகு குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருப்பது உங்கள் லோன் ஹிஸ்ட்ரியை மேம்படுத்தவும், உங்கள் வின்நாத்தின் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஒரு கிரெடிட் கார்டு கையில் கிடைத்தவுடன் மிக விரைவாக அடுத்த கார்டுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதன் மூலம், உங்கள் கிரெடிட் ரேட்டிங்கை சிறப்பாக பராமரிக்கலாம். மேலும், எதிர்காலத்தில் சிறந்த நிதி வாய்ப்புகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளலாம்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா…? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது…?

Read More

Previous Post

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

வெளி உலக தொடர்பு கூடாது.. போன் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை… புதிய போப் தேர்வில் தொடரும் ரகசியம்

Next Post
வெளி உலக தொடர்பு கூடாது.. போன் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை… புதிய போப் தேர்வில் தொடரும் ரகசியம்

வெளி உலக தொடர்பு கூடாது.. போன் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை... புதிய போப் தேர்வில் தொடரும் ரகசியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin