உக்ரைன் வெறியாட்டம்.. பற்றி எரியும் ரஷ்யா-வின் பதறவைக்கும் வீடியோ.. விடியற்காலையில் ட்ரோன் அட்டாக்!
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. சவுதியில் தாக்குதல் நடத்தியதற்காகவும், ஈரான் உடன் போர் காரணமாகவும் அமெரிக்கா யெமன் நாட்டின் ஹவுதி படைகள் மீதும் ஈரான் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வரும் இதேவேளையில்..
உலக நாடுகளுக்கு முக்கிய சப்ளையராக இருக்கும் ரஷ்யா மீது உக்ரைன் பெரும் தாக்குதலை இன்று காலையில் நடத்திய வேளையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ அருகில் இருக்கும் Kapotnya எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் மூலம் Kapotnya oil refinery பற்றி எரியும் வீடியோ பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கடந்த வாரம் தான் உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் டிரம்ப்-ன் அழைப்பை ஏற்று எனர்ஜி உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்து வெறும் 6 நாட்களில் உக்ரைன் மாபெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
சமீபத்தில் ரஷ்யா படைகள் உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்பு மீது பெரும் தாக்குதலை மேற்கொண்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் இன்று Kapotnya எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது மிகவும் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு அலையாகும், காரணம், இந்த ஒரு அலை தான் தலைநகர் மாஸ்கோவின் 35 – 40 சதவீத எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்கிறது, மேலும் இந்த ஆலையில் ஒரு நாளுக்கு 2,80,000 பேரல் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதால்.. இந்த ஆலை மீதான தாக்குதல் என்பது தலைநகரின் இயக்கத்தை முடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: Ukrainian drones have just struck Russias Kapotnya oil refinery in Moscow, the citys only refinery with a capacity of around 280,000 barrels per day, in a raid on the capital this morning.
This comes only six days after Trump claimed that Ukraine had agreed to stop… pic.twitter.com/qx5zwh6Wre
— The Hormuz Letter (@HormuzLetter) September 20, 2026 “>
உக்ரைனின் இந்த தாக்குதல் குறித்து மாஸ்கோ மேயர் கூறுகையில் ரஷ்ய வான் பாதுக்காப்பு அமைப்பு சுமார் 151 டிரோன்களை எதிர்த்து தாக்கியுள்ளது. ஆனால் சில டிரோன்கள் சுத்திகரிப்பு ஆலை, லாஜிஸ்டிக்ஸ் தளத்தை தாக்கியுள்ளது.
ரஷ்யாவின் நிதி ஆதாரத்திற்கு முக்கியமான சொத்தாக விளங்குவது கச்சா எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதி தான், இதை அழிக்கும் வண்ணமாக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக உக்ரைன் தனது தாக்குதல் திறனை தொடர்ந்து மேம்படுத்தி எல்லையின் இருந்து தற்போது தலைநகர் வரையில் தாக்குதல் பகுதியை விரிவாக்கம் செய்துள்ளது. தற்போது சவுதி பைப்லைன் தாக்குதலுக்கு உள்ளான காரணத்தால் உலக நாடுகளுக்கு முக்கியமான சப்ளையராக இருக்கும் ரஷ்யாவின் தாக்குதல் ஒட்டுமொத்த உலகளவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

