• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் – 1,000+ நாட்களில் இதுவே முதல் முறை! | Intercontinental ballistic missile fired by Russia in first known use: Ukraine

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in உலகம்
Reading Time: 6 mins read
0
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் – 1,000+ நாட்களில் இதுவே முதல் முறை! | Intercontinental ballistic missile fired by Russia in first known use: Ukraine
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீவ்: கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன என்பதைப் பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் முதன்முறையாக அமெரிக்க, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐசிபிஎம் (ICBM) ரக ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில், இந்த ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அனுமதியால்… – கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது 1000 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணை​களைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கி​னார்.

இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்​படுத்​தும்​பட்​சத்​தில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த தயங்கமாட்டோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இதற்​கேற்ப தன் அணு ஆயுதக் கொள்​கை​யில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்​படி, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்​ரைன்), அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்​குதல் மேற்​கொண்​டால், பதிலுக்கு அந்நாட்​டின் மீது ரஷ்யா​வும் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் என்று தெரிவிக்​கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் தயாரான நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இது தங்கள் நாட்டின் பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதையடுத்து, கீவ் நகரின் மீது வான் வழி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடியது. அத்துடன் தூதரக ஊழியர்கள் மற்றும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளும் கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை நேற்று மூடின.

இந்நிலையில், கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. உக்ரைன் விமானப் படை இதனை உறுதி செய்துள்ளது.



Read More

Previous Post

‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு | Self-help group goods sold for Rs. 51 lakh through Madhi Angadi – TN Govt

Next Post

குறைந்த திருப்பிச் செலுத்தும் படிப்புகளுக்கான நிதியை நிறுத்த எந்தத் திட்டமும் இல்லை – PTPTN தலைவர் – Malaysiakini

Next Post
குறைந்த திருப்பிச் செலுத்தும் படிப்புகளுக்கான நிதியை நிறுத்த எந்தத் திட்டமும் இல்லை – PTPTN தலைவர் – Malaysiakini

குறைந்த திருப்பிச் செலுத்தும் படிப்புகளுக்கான நிதியை நிறுத்த எந்தத் திட்டமும் இல்லை – PTPTN தலைவர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin