உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தின் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆரம்பகட்ட ஆய்வுகளில் அது வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பதையே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
வட கொரியா இராணுவ உதவி
நீண்ட நாட்களின் பின்னர் வட கொரிய ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது ரஷ்ய மற்றும் வட கொரிய ஆட்சிக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு ஏவுகணைகளையும் வீரர்களையும் வட கொரியா வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Image Credit: The Conversation
இந்த நிலையில், கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், குறிப்பாக பேட்ரியாட் அமைப்புகளுக்கான இடைமறிப்பு ஏவுகணைகள், அத்துடன் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஆயுதங்களை பெறுவதில் உக்ரைன் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா பதில்
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தியுள்ளன.

Image Credit: CEPA
இவ்வாறானதொரு பின்னணயியில், உக்ரைன் முழுவதுமாக வெளிநாட்டு ஆயுதங்களைக் கொண்டே போரிடுவதால், வெளிநாட்டு ஆயுதங்களின் பயன்பாட்டிற்காக ரஷ்யாவை விமர்சிக்க உக்ரைனுக்கு உரிமை இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

