உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமுர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இராணுவ ஆயுதங்கள்
குறித்த அறிக்கையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கையே தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு புச்சா மாவட்டத்தில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் அமைந்திருந்த கிடங்கு மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

