Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலாஸ்காவில் சந்திக்க உள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி. ரஷ்யா ஒப்புக்கொள்ளாவிட்டால் கடும் விளைவுகள் என எச்சரிக்கை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரஷ்ய அதிபர் புதினை வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக் கொண்ட போதும், ரஷ்யா இறங்கி வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த டிரம்ப், இன்றைக்குள் ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். மேலும், அந்நாட்டுடன் வணிகம் செய்து வருவதாகக் கூறி, இந்தியாவிற்கு கூடுதல் வரியும் விதித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரஷ்ய அதிபர் புதினை, வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.
August 09, 2025 7:43 AM IST
உக்ரைனுக்கு எதிரான போர் முடிவுக்கு வருகிறதா? – உறுதியானது டிரம்ப் – புதின் சந்திப்பு… எங்கு, எப்போது?


