[ad_1]
Last Updated:
உக்ரைனில் அமைதிக்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த டிரம்ப் அரசின் நடவடிக்கையை சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்தியா மீது 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் வகையில் இந்தியா அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரி விதிப்பை அதிகப்படுத்தினார்.
இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதி, அவசரகால அதிகார சட்டங்களை கொண்டு டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்தது சட்டவிரோதம் என தெரிவித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில், அமெரிக்க விதித்துள்ள வரி அதிகப்படியானது அல்ல என்றும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
September 05, 2025 4:04 PM IST
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்!