கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா. இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரம் குலு. இங்குள்ள நெடுஞ்சாலையில் இன்று வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு பேருந்துகள் எதிர்எதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. முன்னாள் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றன. அப்போது இரண்டு பேருந்துகளும் டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. அதேவேளையில் மேலும் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டன.
இதில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்பட்டதும், பலர் மயக்கமான நிலையில் கிடந்தனர். இதனால் அவர்கள் இறந்ததாக தவறாக கணக்கிடப்பட்டது. இதனால் 63 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 46 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவில் கோர விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. என்ற போதிலும் கடந்த சில வருடங்களில மோசமான விபத்து இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவனக்குறைவாக முந்திச் செல்வது, அதிக வேகமாக செல்வது ஆகியவற்றால் மட்டுமே கடந்த ஆணடு நடைபெற்ற விபத்துகளில் 44.5 சதவீதம் விபத்துகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சாலை விபத்தில் 5144 பேர் உயிரிழந்துள்ளனர். 2023-ல் 4806 பேரும், 2022-ல் 4534 பேரும் உயிரிழந்துள்ளனர்.