புதுடெல்லி:
மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஜார்ஜியா உட்பட நான்கு நாடுகளுக்கான தனது விமானச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ஜனவரி 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இண்டிகோ நிறுவனம் பின்வரும் நாடுகளுக்கான சேவைகளை நிறுத்தியுள்ளது: அவற்றில் ஜார்ஜியா (Tbilisi), கஜகஸ்தான் (Almaty), உஸ்பெகிஸ்தான் (Tashkent), அசர்பைஜான் (Baku) ஆகிய நாடுகள் பாதிப்படைந்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், ஈரான் வான்பரப்பை (Airspace) வணிக ரீதியான விமானங்கள் பயன்படுத்துவது அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.




