ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், நான்கு
மாதங்களுக்குப் பிறகு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு
ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன.
ஈரான் அதிகாரிகள் இதனை நூற்றாண்டின் இறுதிச்சடங்கு என்று அழைக்கின்றனர்.
தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா பள்ளிவாசலில் அவரது உடல் பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 12 முதல் 20 மில்லியன் மக்கள்
கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரார்த்தனைகள்
இறுதிச்சடங்கை ஒட்டி தெஹ்ரானில் சனிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை பொது மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கமேனியுடன் சேர்த்து அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது ஒரு வயது பேத்தி
சஹ்ரா முகமதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் உடல்களும் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ளன.
தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம்
இதையடுத்து செவ்வாய்க்கிழமை முக்கியமான மதத் தலமான கோம் (Qom) நகருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படும்.
இதன்பின்பு ஈராக்கில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பலா ஆகிய புனித நகரங்களுக்கும்
கமேனியின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக அடுத்த வாரம் வியாழக்கிழமை
அவரது சொந்த ஊரான மஷாத்தில் (Mashhad) உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அடக்கம்
செய்யப்படவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கமேனியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei)
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

