அமெரிக்கா விரைவில் ஈரானின் ‘பிக்காக்ஸ் மலை’ மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த பிக்காக்ஸ் மலைப் பகுதி, ஏற்கனவே கடுமையாக சேதமடைந்துள்ள ஈரானின் பிரதான ‘நடன்ஸ்’ யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிக்காக்ஸ் மலை தளத்தை அமெரிக்கப் படைகள் மிக விரைவில் இலக்கு வைத்து தாக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முழுமையாக அழிப்பது கடினம்
குறித்த தளம், ஈரானின் மிகவும் பலப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு ராணுவ மையமாக காணப்படுகிற நிலையில், அது மிகவும் கடினமான கிரனைட் பாறைகளுக்கு அடியில், சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வெட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, மிகவும் ஆழமான பாறைப் பகுதியில் அமைந்துள்ளதால், சாதாரண குண்டுகளால் அல்லது நிலத்தடி ஊடுருவல் குண்டுகளால் (Bunker Buster Bombs) கூட இந்த மையத்தை முழுமையாக அழிப்பது கடினம் என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை நுழைவாயில்கள் அல்லது அதன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

