• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' – கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' – கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.

நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய பின்னணி.

கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், ஈரானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இயன் காட்ஸ் ‘முன்னெச்சரிக்கைத் தாக்குதல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றும் கூறியுள்ளார்.

அதுவரை…

அடுத்ததாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “சில நொடிகளுக்கு முன்பு, ‘ஆபரேஷன் ரைஸிங் லயன்’ என்கிற ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இந்த அச்சுறுத்தல் அகலும் வரை, இந்த ஆபரேஷன் தொடரும்” என்று பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Greta Thunberg: இஸ்ரேல் படையிடம் பிடிபட்ட செயற்பாட்டாளருக்கு என்ன ஆனது?

எங்களுக்குச் சம்பந்தமில்லை

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மீது இஸ்ரேல் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் எங்களுக்கு (அமெரிக்கா) எந்த சம்பந்தமும் கிடையாது. இப்போது, அங்கே இருக்கும் அமெரிக்கப் படைகளைக் காப்பதே எங்களுடைய முன்னுரிமை.

இந்தத் தாக்குதல் தங்களின் தற்காப்பிற்கு மிகவும் முக்கியம் என்று இஸ்ரேல் எங்களிடம் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அரசு நிர்வாகம் அங்கு இருக்கும் எங்களின் படையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ

நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன், ஈரான் அமெரிக்காவையும், அமெரிக்காவைச் சேர்ந்தவர்களையும் டார்கெட் செய்யக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர் கூறுகையில்…

“ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இது ஈரானை அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடாமல் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையைத் தடுக்கும்.

ஏற்கனவே உலகில் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் போய்க் கொண்டிருக்கும் வேளையில், இது இன்னொரு போராக உருமாறலாம்” என்று எச்சரிக்கின்றனர்.

Israel: நிவாரணப் பொருளுடன் காசா சென்ற கிரேட்டா தன்பர்க் கைது; இஸ்ரேல் சொல்வது என்ன?

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உள்ளதா?

ஈரானிடம் இதுவரை அணு ஆயுதம் இல்லை. ஆனால், அணு ஆயுதம் கொண்டிருக்க வேண்டிய விதிமுறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எட்டி வருகிறது ஈரான்.

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருக்கிறது. ஆனால், அது குறித்து இஸ்ரேல் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று சர்வதேச அளவிலான செய்திகள் கூறுகின்றன.

ஈரானின் இந்த நடவடிக்கையைத் தடுக்கவே, இஸ்ரேல் இந்தத் தாக்குதலைக் கையிலெடுத்துள்ளது. இதற்கு ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும். இது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், சில பொருளாதாரப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

36 words / 339 characters

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 உயர்வு: ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை! | gold price today increased by rupees 1560 per sovereign

Next Post

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகு*ண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

Next Post
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகு*ண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகு*ண்டு மிரட்டல் - அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin