ஜூன் 12 நள்ளிரவு ஈரானை தாக்கியது இஸ்ரேல். “இதில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த நாளே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…
“ஈரான் மீது நள்ளிரவு நடந்த தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஈரான் அமெரிக்காவை எந்த விதத்தில் தாக்கினாலும், ஈரான் மீது அமெரிக்காவின் முழு படையும் முழு பலத்துடன் இறக்கப்படும்.

இது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இருக்கும். எங்களால் ஈரான், இஸ்ரேலுக்கு இடையே ஒப்பந்தத்தை கொண்டுவந்து, ரத்த களறி மோதலை தடுக்க முடியும்”.
மார்க் ரூபியோவும் தன் அறிக்கையில், ஈரான் தங்களை தாக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
இஸ்ரேல் தான் ஈரான் மீது தாக்குதலை முதலில் தொடங்கியிருந்தாலும், ‘ஈரான் தவறாக புரிந்துகொண்டு, தங்கள் மீது எந்தத் தாக்குதலை தொடங்கிவிடக் கூடாது’ என்பதில் மிக தெளிவாக இருக்கிறது அமெரிக்கா.

