ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போரில் ஈட்டப்பட்டுள்ள மகத்தான இராணுவச் சாதனைகளை அரசியல் எதிரிகள் திட்டமிட்டுச் சிதைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
தீர்க்கமான வெற்றி
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவித்த அவர், தீவிர இடதுசாரிகளும் ஜனநாயகக் கட்சியினரும் இந்த வெற்றியைத் திசைதிருப்ப முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா பெற்று வரும் இத்தகைய தீர்க்கமான வெற்றிகளைக் கண்டு அவர்கள் வெறுப்படைவதாகவும் உள்நாட்டிற்குள் குழப்பத்தை உருவாக்கி மக்களின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.

நாம் இவ்வளவு முழுமையாகவும் தீர்க்கமாகவும் வெற்றி பெறுவதை (WIN) அவர்கள் கண்டு அஞ்சுகிறார்கள் ஆனால் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கப் பொதுமக்கள் நன்கு அறிவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, முதலில் அமெரிக்கா (AMERICA FIRST) என அவர் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தை மற்றும் இராணுவக் குவிப்பு என இருமுனை நகர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் ட்ரம்ப்பின் இந்த அரசியல் ரீதியிலான தாக்குதல் அமெரிக்க உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

