• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் மிரட்டலை முறியடித்த ஓமன் வழிப்பாதை: ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து தப்பிய எண்ணெய் கப்பல்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஈரான் மிரட்டலை முறியடித்த ஓமன் வழிப்பாதை: ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து தப்பிய எண்ணெய் கப்பல்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 25, 2026 8:43 PM IST

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் (LPG/LNG) கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த குறுகிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர பதற்றத்திற்கு மத்தியிலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் அச்சுறுத்தல்களைத் தகர்த்து, ‘ஸ்டாயிக் வாரியர்’ உள்ளிட்ட பல கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் இந்த சர்வதேச கடல்வழிப் பாதையில் கண்ணிவெடிகளை வைத்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தது. தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 60 நாட்கள் காலக்கெடுவுக்குள், கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கப் புதிய உத்திகள் கையாளப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியின் மையப்பகுதியில் ஈரானியப் படையினர் கண்ணிவெடிகளை வீசியிருந்ததால், வழக்கமான போக்குவரத்துப் பாதை மிகவும் ஆபத்தானதாக மாறியது.

இதற்கு மாற்றாக, ஐநா சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மற்றும் ஓமன் நாடு இணைந்து ஒரு புதிய பாதுகாப்பான கடல்வழிப் பாதையை உருவாக்கியுள்ளன. இந்த புதிய பாதையின்படி, டாங்கர் கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஓமனின் முசந்தம் தீபகற்பத்தின் கடற்கரைக்கு மிக நெருக்கமாக, ஓமன் நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதி வழியாகப் பயணித்து ஈரானின் எல்லையைத் தவிர்த்துள்ளன.

இந்த புதிய கடல்வழிப் பாதைக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “எங்களது அனுமதியின்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாதை முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது; எங்களது எல்லையை மீறுபவர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும்” என ஈரான் அரசு ஊடகமான IRNA மூலம் எச்சரித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் 5-வது கடற்படையின் பாதுகாப்பு மற்றும் உலகப் புகழ்பெற்ற ‘மேர்ஸ்க்’ (Maersk) போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்களின் துணிச்சலான முடிவால் கப்பல்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. கடந்த வாரத்தில் வெறும் 33 ஆக இருந்த கப்பல்களின் எண்ணிக்கை, இந்த வாரம் 125 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் (LPG/LNG) கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த குறுகிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாகவே உலக நாடுகள் இப்பகுதியின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஈரான் மிரட்டலை முறியடித்த ஓமன் வழிப்பாதை: ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து தப்பிய எண்ணெய் கப்பல்கள்!

Read More

Previous Post

ஆதார், பாஸ்போர்ட் இருந்தா மட்டும் நீங்க இந்தியன் ஆகிட முடியாது? அப்போ எந்த ஆவணம் தான் செல்லும்? | Passport, Aadhaar, Voter ID — Do Any Prove Indian Citizenship? What the MEA and Courts Say

Next Post

பாசிர் கூடாங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்: சமையல் எரிவாயு கசிவால் வெடித்த தீ – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்! | Makkal Osai

Next Post
பாசிர் கூடாங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்: சமையல் எரிவாயு கசிவால் வெடித்த தீ – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்! | Makkal Osai

பாசிர் கூடாங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்: சமையல் எரிவாயு கசிவால் வெடித்த தீ – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin