ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து பேசி கொண்டிருந்தவர்கள்… பேசாதவர்கள் என அனைத்து தரப்பும் இப்போது ஈரான் போர் குறித்து பேசுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியே நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.
ஐரோப்பிய நாடுகளும் இப்போது ஈரான் போர், அதனால், தங்களுக்கு ஏற்படும் தாக்கம் பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்… அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றனர்.

அதில் அவர், “ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்தால், உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் ஆதரவு குறைந்துவிடும்.
உக்ரைன் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணையை வெகுவாக நம்பியுள்ளது. ஏற்கெனவே, இவை உக்ரைனுக்கு குறைந்த அளவில் தான் கொடுக்கப்படுகின்றன. இந்தப் போர் தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.
இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யா ஏவும் ஏவுகணைகளிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாத்து வர முடிகிறது.
இப்போது இன்று உக்ரைன் யாருக்கும் முன்னுரிமையாக இல்லை. அதனால் தான், இந்தப் போர் நீடித்தால் உக்ரைனுக்கு குறைந்த ஆதரவே கிடைக்கும் என்று பயமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.
