இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும், நாமக்கல் மண்டலத்தில் இருந்து துபாய், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் கண்டெய்னர் கப்பல்கள் மூலம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.


