அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்காக ஈரான் போரில் தலையிட்டார் என்று முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் உருவாகி வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே ட்ரம்ப் போரில் தலையிட்டார் என்றும் அவர் கூறினார்.
ஈரானுடனான போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை
ஈரானுடனான போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வெளியிடப்பட்ட கோப்புகளிலிருந்து அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதே ட்ரம்ப் போரில் தலையிட்டதற்கான காரணங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது இதற்கு முன்பும் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, ஆனால் அவர் அவற்றை மறுத்திருந்தார்.
தனது பலத்தை காட்ட முயலும் ட்ரம்ப்
தற்போதைய அமெரிக்கத் தலைமை, நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் ஊழல் நிறைந்த தலைமை என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி ட்ரம்ப், இராணுவ நடவடிக்கை மூலம் தனது பலத்தைக் காட்டவும், தான் விரும்பும் எவரையும் தாக்கும் திறன் தன்னிடம் உள்ளது என்பதை உலகிற்குக் காட்டவும் முயற்சிக்கிறார் என்று ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
