பித்தலாட்ட பேச்சுகள்…
பேச்சுவார்த்தையை அவர்கள்தான் கேட்கிறார்கள். சிலர் அதை “கெஞ்சுகிறார்கள்’ என்றும் சொல்வார்கள்.
பேச்சுவார்த்தையும் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான நேரமும் ஒதுக்கப்படுகிறது.
ஆனால் வெளியிலோ, ‘நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை, எதைப் பற்றியும் பேசவில்லை. நாங்கள் ஓமன் நாட்டோடு மட்டுமே பேசுகிறோம்’ என்று பகிரங்கமாகவும் பெருமையாகவும் பேசுகிறார்கள்.
அத்துடன் நிறுத்தாமல், ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்கும்’ என்று தங்களின் வழக்கமான பித்தலாட்டமான பேச்சுகளைத் தொடர்கிறார்கள்.

பிரச்னைக்குத் தீர்வு காண்கிறோம்
உண்மையில் அது ஏற்கெனவே அமெரிக்கக் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிலும், நமது ‘உபாயக் முடக்கத்திலும்’ அல்லது சிலர் சொல்வது போல் ‘அமெரிக்காவின் எஃகுச் சுவரிலும்’தான் உள்ளது.
நாங்கள் நினைத்தால் ஒழிய ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படும் வரையிலோ அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரையிலோ எதுவுமே உள்ளே செல்லப் போவதும் இல்லை.
ஈரான் அதை ஒத்துக்கொள்ள விரும்புகிறதோ இல்லையோ, பல தசாப்தங்களாக அவர்களே உருவாக்கிய ஒரு பிரச்னைக்குத்தான் நாங்கள் இப்போது தீர்வு காணப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
விஷயம் மிகவும் எளிமையானது, ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது!”

