Last Updated:
ஈரானின் கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணாமல் போன இந்தியர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. மேலும், உலக அளவில் எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான், கப்பல்கள் இதனை கடந்தால் ஏவுகணைகளை ஏவி கொளுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமனுக்கு சொந்தமான கசாப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கைலைட் என்ற கப்பல் மீது ஈரான் குண்டு வீசியது.
கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில், 2 இந்தியர்கள் உட்பட 3 பேரை காணவில்லை எனக்கூறப்பட்டது. இதில் பிகாரை சேர்ந்த கேப்டன் ஆஷிஷ் குமார் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த திலிப் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த புதன்கிழமை, மஸ்கட்டில் “MKD வியாம்” என்ற கப்பல் மீது ஈரான் குண்டு வீசியதில் மும்பையை சேர்ந்த 25 வயதான திக்சிட் சோலான்கி என்பவரும் உயிரிழந்தார். இதன் மூலம் ஈரானின் கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

