ஈரான் எண்ணெய் அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாட் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் (NIOC) தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) இயக்குநருமான ஹமித் போவர்ட் (Hamid Bovard) நாட்டின் தற்காலிக (பதில்) எண்ணெய் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்நெஜாட்டின் ராஜிநாமாவுக்கான காரணத்தை அரசு ஊடகங்கள் உடனடியாக வெளியிடவில்லை. இதனிடையே, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாகத் தொடரும் போர் நாட்டின் பொருளாதாரத்தின் மீது தொடர்ச்சியான அழுத்தங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், அவர் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
இதுகுறித்து அதிபர் அலுவலக அதிகாரி ஒருவரைக் குறிப்பிட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “நாட்டின் அதிபரான டாக்டர் பெசஷ்கியன் (Dr. Pezeshkian) மொஹ்சென் பக்நெஜாட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஹமித் போவர்ட் பதில் எண்ணெய் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிநாமா அறிவிப்புக்கு முன்னர் பக்நெஜாட் குறிப்பிடுகையில், “நாம் விற்ற எண்ணெய்க்கான வருவாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது; அது இறைவனின் நாளுடன் தொடரும்” என்று கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி பக்நெஜாட் ஹமித் போவர்ட்டை தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இயக்குநராகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


