ஈரானின் உச்சத் தலைவரின் மூத்த ஆலோசகரான கமல் கராசி, இந்த மாத தொடக்கத்தில் அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க-சியோனிச எதிரிகளின் தாக்குதலில் காயமடைந்த அவர் சில மணி நேரங்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்ததாக ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் கராசியின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கராசி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
போர் முடிவு தொடர்பான கணிப்பு
முன்னதாக தற்போதைய இந்த மோதலை ஈரானால் நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்த கராசி, இதில் ராஜதந்திர ரீதியான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி இடமேயில்லை என்று தெரிவித்திருந்தார்.

Image Credit: Brussels Morning Newspaper
அத்தோடு, எதிரிகளுக்கு ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகளின் மூலமாக மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் அவர் உறுதியாக கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

