ஈரானின் ஆட்சி முறையைக் கலைக்காத வரையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும், அமெரிக்காவிற்கு ஒரு தோல்வியாகவே அமையும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழக புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் வியூக ஆய்வுகள் துறைத் தலைவர் பிலிப்ஸ் ஓ’பிரையன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“இதன் முடிவில், அமெரிக்கா நாடு திரும்பிச் சென்று, ஈரானில் தற்போதைய ஆட்சியையே பதவியில் நீடிக்கச் செய்தால், அது ஒரு தோல்வியாக அமையும்.
அமெரிக்க எதிர்ப்பு
ஏனெனில், அந்த ஆட்சி இன்னும் அதிக அமெரிக்க எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருப்பதுடன், அநேகமாக சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் மேலும் நெருங்கிச் செல்லும்.

அமெரிக்க தரப்பினர் தங்களால் இயன்ற அனைத்தையும் ஈரான் மீது பிரயோகித்திருப்பார்கள் ஆனால் அதன் ஆட்சியில் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்.
அதன் அதிகாரத்தின் சில பகுதிகளை அவர்கள் அழித்திருப்பார்கள், ஆனால் அது மீண்டும் தன்னை மீட்டுக் கொள்ளும்.
இதன் முடிவில் ஈரான் அதே அடிப்படை ஆளும் குழுவுடன் இருப்பதைக் கண்டால், அது அமெரிக்காவின் தோல்வியாகும்” என விளக்கியுள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

