Last Updated:
ஈரானின் கொலைப் பட்டியலில் தான் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்
ஈரானுடன் முழு அளவிலான போர் மீண்டும் தொடங்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற நோட்டே அமைப்பின் மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானில் முதல் இரு கட்டத் தலைவர்கள் மறைவைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட தலைவர்கள் வந்துள்ளதாகவும், அவர்களும் அழிக்கப்படலாம் என்றும் கூறினார்.
ஈரானின் கொலைப் பட்டியலில் தான் தான் முதலிடத்தில் இருப்பதாகக் கூறிய டிரம்ப், தனக்கு டிக்டாக் செயலியில் முதலிடத்தில் இருப்பதுதான் மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அந்நாடு மீது பதில் தாக்குதல் மட்டும் நடத்துவோம் என்று டிரம்ப் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


