ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட விசாரணை
லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

