ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் வரும் வார இறுதியில் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக, திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடித்துவிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் உறுதியான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
ட்ரம்பின் இறுதி ஒப்புதல்
இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டு, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தாலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Tablet Magazine
எவ்வாறாயினும், முழுவீச்சிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஈரான் மீதான தாக்குதலில் இணையுமாறு தங்களிடம் கேட்கப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

