ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு வந்த அமெரிக்காவை அந்நாடு சுமார் ஒரு மாத காலத்திற்கு தள்ளி நின்று வேடிக்கை மாத்திரம் பார்க்க வைத்துள்ளது.
ஈரான் மீது கை வைப்பதற்கு ஒன்றுக்கு பலதடவை யோசிக்க வேண்டிய நிலைமைக்கு அமெரிக்காவை அச்சப்பட வைத்துள்ளது.
இத்தனைக்கும் ஈரான் தனது ஆயுதங்களில் ஒன்றை கூட இதுவரை அமெரிக்காவை நோக்கி ஏவவும் இல்லை ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் இல்லை.
எனினும், ஊடகங்களில் மூலமாக தனது ஆயுத பலம் தொடர்பில் திரும்பத் திரும்ப பேசி தாக்குதல் நடத்த அச்சப்படும் நிலைக்கு அமெரிக்காவை ஈரான் தள்ளிவிட்டுள்ளது.
இதனை ஈரானின் உளவியல் யுத்தத்தின் வெற்றி என்று கூறலாம்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் மறைமுகமான போர் உத்திகளில் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

