ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், ஈரானை முற்றிலுமாக அழிப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அவர், “என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துபார்ப்போம்,” என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பு உடன்பாடு
அத்தோடு, இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக உள்ளது என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

“ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எல்லா வகையிலும் இழந்து வருகிறது.
அந்த ஒப்பந்தம் சரியானதாக இல்லையென்றால், நான் அதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டேன்.ஆனால் தற்சமயம், அவர்கள் எல்லா வகையிலும் இழந்து கொண்டிருப்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

