ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில், “ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ விமானங்கள்
தற்போதைய நிலையில், இப்பிராந்தியத்தின் கடல் மற்றும் வான் பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில் 20 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான நவீன இராணுவ விமானங்களும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

