தெஹ்ரானுடன் உளவுத் தரவுகளை தமது நாடு
பகிர்வதில்லை என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ இன்று (01)புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ருடென்கோ, ரஷ்ய மக்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் குறிவைப்பதற்காக உக்ரைனுக்கு அத்தகைய உளவுத் தகவல்களை வழங்கும் வோஷிங்டன் மற்றும் லண்டனின் அடிச்சுவடுகளை மொஸ்கோ பின்பற்றுவதில்லை என்று கூறினார்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு பதிலடி
“ரஷ்யாவின் குடிமக்கள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்காக உக்ரைனுக்கு அத்தகைய தகவல்களை அனுப்பும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைப் போலல்லாமல், மொஸ்கோ தெஹ்ரானுடன் உளவுத் தரவுகளைப் பகிர்வதில்லை,” என்று இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

“எந்தவித தூண்டுதலும் இன்றி, சட்டவிரோதமாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பலியாகியுள்ளது,” என்று ருடென்கோ வலியுறுத்தினார்.
“தெஹ்ரான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துகிறது,” என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

